CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஸ்ரீராமர்புகழ்

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்

ஸ்ரீராமபுண்யஜெயம்

ஸ்ரீராமபுண்யஜெயம்

பெரிய குரு தட்சணை

தேவகிநந்தன் வசுதேவபுத்ரன்
யசோதேயன் நந்தகுமாரன்

ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்

ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்

ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன்

உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன்

மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன்

ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்

பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்

மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்

முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன்

ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன்

ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன்

காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன்

ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன்

வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன்

ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன்

தோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்
பொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்
மலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்
தாமரையாரன் வெண்தாமரையாரன்
செண்பகமலராரன் செந்தாமரையாரன்

கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி

கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன்

குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்

திருத்துழாய்ஆரன் சதுர்வேதஆரன்
பிரபந்தஆரன் அபங்கஆரன்
திருவாய்மொழியாரன் திருப்பாவைமணியாரன்
பல்லாண்டுமுத்தாரன் நாச்சியார்மொழியாரன்

திருமழிசைத்தமிழாரன் மதுரகவிமொழியாரன்
திருமாலையாரன் ஸ்ரீசுப்ரபாதன்
கொஞ்சுகுலசேகரபிஞ்சுதமிழாரன்
திருமங்கைமன்னன்பெரியமொழியாரன்

திருப்பாவையாரன் நாச்சிமொழியாரன்
திருமொழியாரன் சந்தவிருத்தாரன்
திருமாலையாரன் திருவெழுச்சியாரன்
அன்றலர்ந்ததாமரையன் சென்றுளவுமாநிறையன்
கொண்டலுடைவான்நிறத்தன் வெள்ளைமனபால்நிறத்தன்

ஸ்ரீராமானுஜஜெயம்

ஸ்ரீராமானுஜஜெயம்

இளையபெருமாள் துதி

அவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்
அவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்
அவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்
அவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்

அவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்
அவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்
அவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை
உமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை

அவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி
அவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்
அவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்
நீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்

அவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்
அவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்
அவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்
அவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்
பொன்ஆதிஷேஷ ராமானுஜேஷ
லக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே
உடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே
எதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி

கோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி
நாராயண மந்திரம் முழக்கமாய் கூறி
அனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி
நரகம் புக துணிந்த பரம உபகாரி

இளையபெருமாளே உம் பாதம் போற்றி
லக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி
பலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி
ராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி

கிருஷ்ண பலராமரே போற்றி
பலராம கிருஷ்ணரே போற்றி
ராம லக்ஷ்மணரே போற்றி
லக்ஷ்மண ராமரே போற்றி!!

ஸ்ரீராமதூதஜெயம்

ஸ்ரீராமதூதஜெயம்

சின்ன குரு தட்சணை

அஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே
வஞ்சனையற்ற பக்தியில் முதல்வனே
ராம பக்தியில் தன்னை இழந்திடும்
தன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்
நல்ல வித்தையில் நீயென் முன்னோடி
அதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி

மீண்டும் மீண்டும் கனவில் வந்து
உள்ளம் தளரா ஊக்கம் தந்து
எனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே
பணிவின் துணிவின் பக்தியின் உருவே
எப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு
கைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு

காமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்
ராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்
ராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்
ராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்
நான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்
நானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்?

ஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்
காடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்
கதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்
பக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்
ராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்
என் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்?

எண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்
ராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்
நீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்
ஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்
இறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை
இதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை

அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்

ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்

ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!

ரோம ரோமமு ராம நாமமே!

ஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!

கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.
- நம்மாழ்வார்


சிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோ அவ்வேத முதல் காரணன்
-கம்பராமாயணம்

எனையே கதியென்று சரணம் புகுந்தவர்
வாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு
குற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்
நன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்
-ஸ்ரீராமர்

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

வேதசாரம் கீதையே
கீதைசாரம் கிருஷ்ணரே
கிருஷ்ணர்பாதம் பற்றவே
கிருஷ்ணசாரம் கிட்டுமே

கிருஷ்ணசாரம் ராமரே
ராமர்சாரம் நாமமே
ராமநாமம் சொல்லவே
ராமர்பாதம் கிட்டுமே

ராமர்பாதம் கிட்டினால்
நன்மையாவும் கொட்டுமே
நன்மையாவும் கொட்டினால்
நன்மையாவும் கிட்டுமே

நன்மையாவும் என்கையில்
அளவு ஒன்றும் இல்லையே
அளவொன்றும் இன்றியே
நன்மையாவும் கிட்டுமே

ராமாயணம் விவசாயம்
பாகவதம் அறுவடை

ஸ்ரீராமராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!
-சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்
-கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே

-கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்
-கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கிய
ர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-
சிவவாக்கியர்

காராய வண்ண மணிவண்ண கண்ண
கன சங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய நேய
சீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே!
-வள்ளலார்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

டில்லிக்கே ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே

ஹரியாரைப் பணியச் சொன்ன
நல்ல வார்த்தை தட்டாதே
ஹரனாரை நினைக்கச் சொன்ன
அன்பு வார்த்தை தட்டாதே

சிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்
சிந்தைமிகு மானிடா
சிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு
சிவத்தை மறப்பதேனடா?

ராம்ராம்

அம்மா பரமேஸ்வரியை
அடிபணிந்து போற்றுகிறேன்
அப்பா சதாசிவத்தை
அன்புடனே போற்றுகிறேன்
குருநாதர் கிருஷ்ணரை
கும்பிட்டே போற்றுகிறேன்
எந்தெய்வம் ராமரை
என்னுயிராய் போற்றுகிறேன்

கணிதம் தந்து அன்பு செய்த
ஈவ்ளின் மிஸ் போற்றுகிறேன்
தட்டித் தந்து தமிழ் தந்த
துரைராஜ் சார் போற்றுகிறேன்
அடித்தாலும் அன்பான
ராபர்ட் சார் போற்றுகிறேன்
என்னிலும் ஓளி கண்ட
க்ஸேவியர் சார் போற்றுகிறேன்

இன்னும் பல ஆசான்கள்
எத்தனை பேர் என் வாழ்வில்
அத்தனை பேரையும்
அடி பணிந்து போற்றுகிறேன்!

சுவாமி சின்மயானந்தர்

சுவாமி சின்மயானந்தர்
என் கீதாச்சார்யார்

நன்றியுரை

சின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்
என்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்
அவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது
நாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது

அவரென் இதயத்தில்
போட்ட விதை
மரமாகி நின்றது

இறைவனுக்காய்
பலபூக்கள்
நறுமணமாய்
பூத்தது

மனிதருக்கும்
பலகனிகள்
சுவைசத்தாய்
தந்தது

கிருஷ்ணரே அம்மரத்தை
நீரூற்றி வளர்த்தது
ராமரே அம்மரத்துக்கு
உரமாக இருந்தது

அவரைக் காணாத என் கண்கள்
என் குற்றம் செய்ததோ
அக்குற்றத்தை கரைத்திடவே
கண்ணீரை பெய்ததோ

அழுவது குற்றமென்று
அறிவுரைத்த குருவுக்கு
அழுகையில் சொட்டுகின்ற
கண்ணீரே காணிக்கை!

சுகம்பெற்ற இதயத்தின்
சோகமில்லா காணிக்கை
நன்றியால் பெருகியதால்
குற்றமில்லா காணிக்கை!

சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்
சுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி!!

Friday, March 31, 2017

மகாலட்சுமி பொற்பாதம்





















பாதம் என்ன பாதம் மகாலட்சுமியின் பாதம்
ஏழ்மையதை எரிக்கின்ற ஏற்றமிகு பாதம்
வளங்களை வாரி வாரி வழங்குகின்ற பாதம்
மதுசூதனர் மார்பினை அலங்கரிக்கும் பாதம்

பாற்கடலை கடைந்திட தோன்றிய நற்பாதம்
சந்திரனின் சோதரியின் குளிர்ச்சிமிகு பாதம்
மாலவரை நோக்கி மெல்ல நடந்து சென்ற பாதம்
மாலவரும் மெட்டிமாட்ட விரல்பிடித்த பாதம்

சீதையாய் பிறந்தவளின் சிறப்புமிக்க பாதம்
ருக்மிணியாய் பிறந்தவளின் ரசிக்கத்தக்க பாதம்
நரசிம்மர் மடியினின்று தொங்குகின்ற பாதம்
கேசவரும் கைகளால் தாங்குகின்ற பாதம்

தாமரை மலர்மீது வீற்றவளின் பாதம்
தாமரைகளை கரமிரண்டில் ஏந்தியவள் பாதம்
தாமரைக் கண்கொண்டு அருள்பவளின் பாதம்
தாமரைக் கண்ணரும் காதலிக்கும் பாதம்

பொன் நகைகள் தரித்தவளின் பொன்னனைய பாதம்
பொற்குடத்தை கையினிலே பிடித்தவளின் பாதம்
பொற்காசுகளை மழைபோல பொழிபவளின் பாதம்
பொற்குணராம் நாரணரின் நெஞ்சிலுறை பாதம்

வெள்ளை நிறயானைகள் மலர்தூவும் பாதம்
ஆந்தை மீதேறி வானில் உலவுகின்ற பாதம்
அரசபோகம் அருள்பவளின் அழகிய பொற்பாதம்
மாதவரும் மருதாணியால் கோலமிடும் பாதம்

வீரமதை தருபவளின் வீரிய நற்பாதம்
நற்பேறை அருள்பவளின் சீரிய பொற்பாதம்
வெற்றியதை தருபவளின் திறம்மிகுந்த பாதம்
வாசுதேவரும் கொலுசுகளை மாட்டிவிடும் பாதம்

பிள்ளையாரின் அத்தையாரின் பாசமிகு பாதம்
ஆறுமுகர் அத்தையாரின் அன்புமிகு பாதம்
சிவனாரின் தங்கையாரின் தயைமிகுந்த பாதம்
மகாவிஷ்ணுவின் மனைவியின் மாண்புமிகு பாதம்


ஆறுமுகர் பொற்பாதம்






பாதம் என்ன பாதம் இது ஆறுமுகர் பாதம்
சிவனாரின் நெற்றியிலே தோன்றியவர் பாதம்
மூன்றாம்கண்ணில் பிறப்பெடுத்த ஆறுகுணர் பாதம்
வள்ளியவள் போற்றுகின்ற வடிவான பாதம்

திருவேற்காட்டினிலே தவம்செய்த திருமகனார் பாதம்
சக்தியிடம் சக்திவேலை பெற்றவரின் பாதம்
மலையொன்றை கூர்வேலால் பிளந்தவரின் பாதம்
தெய்வானை துதிசெய்யும் தெய்வீக பாதம்

குழந்தை குணம் தருபவரின் கனிவுமிகு பாதம்
உலக அறிவதனை தருபவரின் உத்தம நற்பாதம்
அன்பதனை ஊறவைக்கும் அன்புடையோன் பாதம்
வள்ளியவள் வணக்கமுடன் நேசிக்கும் பாதம்

தொழிலதனில் கவனமதை தருபவரின் பாதம்
தியானமதில் வெற்றியதை தருபவரின் பாதம்
தெய்வீக அனுபவங்கள் தருபவரின் பாதம்
தெய்வானை பணிவுடனே பக்தி செய்யும் பாதம்

குண்டலியாய் மனிதர்களில் வாழ்பவரின் பாதம்
முதுகுதண்டில் மேலும் கீழும் செல்பவரின் பாதம்
மனமதனை ஆள்பவரின் மகிமைமிகு பாதம்
வள்ளியவள் மனமதனை திருடியவர் பாதம்

நான்முகரை சிறைபிடித்த நற்குணரின் பாதம்
சிவனாரை சீடராய் ஆக்கியவர் பாதம்
ஓம்காரப் பொருளதனை விளக்கியவர் பாதம்
தெய்வானை இதயத்தை அலங்கரிக்கும் பாதம்

ஔவையின் தமிழதனை ரசித்தவரின் பாதம்
தமிழ் மொழியில் கவிகள் பல புனைந்தவரின் பாதம்
தமிழதனை வளர்த்தவரின் இனிமையான பாதம்
வள்ளியவள் காதலோடு கன்ணிலொற்றும் பாதம்

சூரனை யுத்தத்தில் வென்றவரின் பாதம்
ஆறுபடை வீடுகொண்டு நின்றவரின் பாதம்
சக்கரங்கள் ஆறினையும் ஆள்பவரின் பாதம்
தெய்வானை அனுதினமும் அன்புசெய்யும் பாதம்

முக்கண் அப்பரின் திருமகனார் பாதம்
முழுமுதலாம் திருமாலின் மருமகனார் பாதம்
கருணைமிகு கணபதியின் தம்பியாரின் பாதம்
வள்ளியவள் தன்வாழ்வை அர்ப்பணித்த பாதம்

அருணகிரி திருப்புகழால் போற்றியவர் பாதம்
சட்டியன்று நோன்பிருக்க அருள்பவரின் பாதம்
கந்த சட்டி கவசமும் போற்றுகின்ற பாதம்
தெய்வானை தன்வாழ்வை அர்ப்பணித்த பாதம்

கார்த்திகைப் பெண்களும் கொஞ்சிய நற்பாதம்
மயிலேறி மின்னலென பயணிக்கும் பாதம்
சேனாதிபதிகளுள் சிறந்தவரின் பாதம்
வள்ளியவள் மலர்கள் தூவும் மங்கள நற்பாதம்

இந்திரனின் துன்பத்தை அகற்றியவர் பாதம்
தேவர்களும் மனமகிழ்ந்து பூசிக்கும் பாதம்
இந்திரனின் மருமகனின் இனிய நற்பாதம்
தெய்வானை மலர்கள் தூவும் மங்கள நற்பாதம்


Thursday, March 16, 2017

பிள்ளையார் பொற்பாதம்































பாதம் என்ன பாதம் இது பிள்ளையாரின் பாதம்
சிறப்பாக செயலதனை செய்ய வைக்கும் பாதம்
மூஞ்சூரின் மீதினிலே பயணிக்கும் பாதம்
சித்தியவள் சிந்தையில் நிலைபெற்ற பாதம்

சக்தியின் மடியினிலே மகிழ்ந்த நற்பாதம்
சிவனாரின் மடியினிலும் திகழ்ந்த நற்பாதம்
முருகரோடு ஓடியாடி விளையாண்ட பாதம்
புத்தியவள் புத்தியில் நிலைபெற்ற பாதம்

தாய் தந்தை சுற்றிவந்து கனி வென்ற பாதம்
தயையுடைய திருமாலின் மருமகனார் பாதம்
ஔவையாரின் அன்புடைய பேரனாரின் பாதம்
அன்புடனே துதிசெய்ய வினையகற்றும் பாதம்

இபமுகாசூரனை வதைத்தவரின் பாதம்
நின்ற இடம் நின்ற படி வெற்றி பெரும் பாதம்
கணங்களை ஆள்பவரின் கண்ணிய நற்பாதம்
பக்தர்களின் பாதையில் தடையகற்றும் பாதம்

பானை வயிறு கொண்டவரின் பாதம் இந்த பாதம்
ஐங்கரங்கள் கொண்டவரின் அற்புத நற்பாதம்
ஆனைமுகம் கொண்டவரின் அழகான பாதம்
நேரத்தில் காரியத்தை முடிக்க வைக்கும் பாதம்

எச்செயலை துவங்கும் முன்னும் நினைக்கத் தக்க பாதம்
எத்தகைய தடைவரினும் தகர்த்தழிக்கும் பாதம்
தலையிலுள்ள தடைகளை அகற்றவல்ல பாதம்
பார்வையதை அகலமாய் ஆக்குகின்ற பாதம்

முக்குணமும் வழங்கவல்ல முழுமுதலின் பாதம்
மும்மலமும் அகற்றவல்ல ஆற்றல்மிகு பாதம்
அனுதினமும் துதிசெய்ய அன்புசெய்யும் பாதம்
அகமதனில் அமைதியை வளரச் செய்யும் பாதம்

அரனாரும் அரியாரும் அன்பு செய்யும் பாதம்
நான்முகரும் சண்முகரும் போற்றுகின்ற பாதம்
இந்திரனும் தேவர்களும் இசைந்து தொழும் பாதம்
இதயத்தில் வைத்துத் தொழ இனிமையான பாதம்

Sunday, October 30, 2016

ஆறாறு தெய்வ துதி




































விஷ்ணு பிரம்மம் சிவ பிரம்மம்
கணேஷ பிரம்மம் முருக பிரம்மம்
ராம பிரம்மம் கிருஷ்ண பிரம்மம்
லக்ஷ்மி பிரம்மம் நரசிம்ம பிரம்மம்
வாணி பிரம்மம் சக்தி பிரம்மம்
சூர்ய பிரம்மம் சந்திர பிரம்மம்

நான்முக பிரம்மம் நாரத பிரம்மம்
அருகம்புல் பிரம்மம் வில்வ பிரம்மம்
துளசி பிரம்மம் சாளக்ராம பிரம்மம்
ஆதிசேஷ பிரம்மம் பாற்கடல் பிரம்மம்
நால்வேத பிரம்மம் சாமகான பிரம்மம்
நந்தி பிரம்மம் மூக்ஷிக பிரம்மம்

மச்ச பிரம்மம் கூர்ம பிரம்மம்
வராக பிரம்மம் வாமன பிரம்மம்
ஶ்ரீரங்க பிரம்மம் வேங்கட பிரம்மம்
இந்திர பிரம்மம் அக்னி பிரம்மம்
வாயு பிரம்மம் வருண பிரம்மம்
கருட பிரம்மம் அனுமத் பிரம்மம்

நாளை முதல் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகிறது. ஆறு நாட்களும் முருகப் பெருமானின் சக்தி இவ்வண்டமெங்கும் அபரிமிதமாக பெருக்கெடுக்கும். இந்த ஆறு நாட்களும் விரதமிருந்தால் நாம் இந்த சக்தியை அதிக அளவில் உள்வாங்கிக் கொள்ளலாம். அது நமக்கு அளப்பரிய நன்மைகளை செய்து கொடுக்கும். நான் கந்த சஷ்டி விரதம் இருப்பது இது ஏழாவது முறையாகும். நாளை முதல் ஆறு நாட்கள் விரதம் இருந்து கொண்டு ஜபம் செய்வதற்காக இன்று நான் இயற்றியதே ஆறாறு தெய்வ துதி ஆகும். இந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டு நாளை முதல் ஆறு நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். ஆன்மிக நாட்டமுள்ள அன்பர்களும் அவ்வண்ணம் செய்து பயன் பெறும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஶ்ரீராமஜெயம்!! முருகருக்கு அரோகரா!! கந்தனுக்கு அரோகரா!!

Wednesday, August 17, 2016

அயக்ரீவர் பொற்பாதம்


பாதம் என்ன பாதம் இது அயக்ரீவர் பாதம்
அறிவதனை வழங்குகின்ற அற்புதநற் பாதம்
அறிவதனின் ஊற்றாக விளங்குகின்ற பாதம்
அடியேனும் அன்புடனே வணங் குகின்ற பாதம்

அறிந்து கொள்ளும் ஆர்வமதை அளிக்கின்ற பாதம்
அறிந்து கொள்ளும் ஆற்றலையும் அளிக்கின்ற பாதம்
முன்தீர்மானம் அஞ்ஞானம் அழிக்கின்ற பாதம்
அடியேனின் இதயத்தில் செழிக்கின்ற பாதம்

புத்தியதை கூர்மையாக தீட்டுகின்ற பாதம்
பக்தியதை பன்மடங்கு கூட்டுகின்ற பாதம்
நினைவாற்றலதை கடல்போல பெருக்குகின்ற பாதம்
அடியேனின் அகம்பாவத்தை சுருக்குகின்ற பாதம்

குதிரைத்தலை குதிரைமுகம் கொண்டவரின் பாதம்
குதிரையதன் கழுத்ததனை கொண்டவரின் பாதம்
குதிரைக்காது குதிரைக்கண்கள் கொண்டவரின் பாதம்
அடியேனை அறிவாளி ஆக்கியவர் பாதம்

அடியேனின் கனவதனில் தோன்றியவர் பாதம்
தன் உருவத்தை நினைவதனில் ஊன்றியவர் பாதம்
அடியேனை உருவங்களை தொழவைத்தரின் பாதம்
அடியேனும் நன்றியுடன் போற்றுகின்ற பாதம்

வேதங்களை மீட்டெடுக்க பிறந்தவரின் பாதம்
அயக்ரீவனெனும் அரக்கனை அழித்தவரின் பாதம்
நான்முகனுக்கு வேதம் மீண்டும் அளித்தவரின் பாதம்
அடியேனை கவிஞனாய் உயர்த்தியவர் பாதம்

நான்முகனுக்கு வேதநான்கும் உரைத்தவரின் பாதம்
நாமகளுக்கு கலைகளை கற்பித்தவர் பாதம்
பல்கலைக் கழகமாய் விளங்குபவர் பாதம்
அடியேனை கலைஞனாய் உயர்த்தியவர் பாதம்

ஒளிர்கின்ற முகமதனை உடையவரின் பாதம்
ஒளிர்கின்ற உதடுகளை உடையவரின் பாதம்
ஒளிர்கின்ற கண்களை உடையவரின் பாதம்
அடியேனை தனதாக உடையவரின் பாதம்

கரம் நான்கு உடையவரின் கருணைமிகு பாதம்
கரமிரண்டில் சங்குசக்ரம் தாங்குபவர் பாதம்
சின்முத்திரையை காட்டிஞானம் வழங்குபவர் பாதம்
அடியேன் இதயத்தில் நிலவாக விளங்குபவர் பாதம்

அறிவதனின் பெட்டகமாய் விளங்குபவர் பாதம்
ஆதி சேடன்மேல் பொக்கிசமாய் துளங்குபவர் பாதம்
கரமொன்றில் வேதநான்கும் பிடித்தவரின் பாதம்
கண்கொண்டு அடியேனை கண்டவரின் பாதம்

வாதிராசருக்கு வரங்கள்பல வழங்கியவர் பாதம்
நிகமாந்த தேசிகரை நிறைஞானி ஆக்கியவர் பாதம்
சரணடைவோரை அறிஞர்களாய் ஆக்குபவர் பாதம்
அடியேனை அறிஞனாய் ஆக்கியவர் பாதம்

அன்பர்கள் அனைவருக்கும் ஹயக்ரீவர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

Sunday, June 19, 2016

வேங்கடேசர் பொற்பாதம்



பாதம் என்ன பாதம் இது வேங்கடேசர் பாதம்
வேங்கடாத்ரி மீதினிலே நிற்பவரின் பாதம்
வேண்டியவை தருபவரின் வேங்கட நற்பாதம்
ஏழுமலை ஆண்டவரை தாங்கி நிற்கும் பாதம்

எப்போதும் நிற்பவரின் பொறுமைமிகு பாதம்
இறைவனே சுட்டிக்காட்டும் பெருமைமிகு பாதம்
காண்பவரின் கடனழிக்கும் கருணைமிகு பாதம்
வேங்கடேச சுவாமியை தாங்கி நிற்கும் பாதம்

சங்குசக்ர தாரியாய் நிற்பவரின் பாதம்
வருபவர்க்கு வள்ளலாக வழங்குபவர் பாதம்
பொன்நகைகள் தரித்தவரின் பொன்னனைய பாதம்
வேங்கடக் கிருஷ்ணரைத் தாங்கி நிற்கும் பாதம்

சாளக்கிராம மாலையொன்று தரித்தவரின் பாதம்
மார்பினிலே மணப்பெண்ணைக் கொண்டவரின் பாதம்
மாப்பிள்ளை கோலத்தில் நிற்பவரின் பாதம்
மாண்புமிகு வேங்கடரின் மகிமைமிகு பாதம்

நறுந்துளசி மாலைகளை ஏற்பவரின் பாதம்
பொற்காசு மாலைகள் தரித்தவரின் பாதம்
வண்ணமலர் மாலைகள் அணிபவரின் பாதம்
வேங்கடநல் ராமரின் வினையழிக்கும் பாதம்

மார்பினிலே உதைத்தவரை மன்னித்தவர் பாதம்
மாலைகள் பலசூடி ஒளிர்பவரின் பாதம்

மங்கையுறை மார்பினரின் மகிமைமிகு பாதம்
மகிழ்ச்சியதை வழங்குகின்ற மகிமையுள்ள பாதம்

வகுளா தேவியாரின் திருமகனின் பாதம்
பத்மா வதியாரின் மணமகனின் பாதம்
ராமராக முன்பிறந்த குணமகனின் பாதம்
சங்கடங்கள் தகர்த்தழிக்கும் வேங்கடேசர் பாதம்

குபேரனிடம் கடன்பெற்று மணந்தவரின் பாதம்
கடன்பெற்று பணப்புழக்கம் உயர்த்தியவர் பாதம்
வட்டிதந்து குபேரனை உயர்த்துபவர் பாதம்
பக்தர்களின் கடன்களை கரைப்பவரின் பாதம்

பசுவுக்கு அடிவிழாமல் காத்தவரின் பாதம்
பசுதந்த பாலதனை பருகியவர் பாதம்
பாலாக பாசமது சுரப்பவரின் பாதம்
பாவமதை பொசுக்குகின்ற புனிதமிகு பாதம்

புற்றினுள்ளே தவத்தினிலே ஆழ்ந்தவரின் பாதம்
ஆழ்வார்கள் பாசுரத்தில் ஆழ்பவரின் பாதம்
பக்தியதில் ஆழ்பவரை ஆள்பவரின் பாதம்
ஆழ்ந்தமிழ்ந்து தியானிக்க அருமையான பாதம்

விண்ணினின்று மண்ணிற்கு இறங்கிவந்த பாதம்
விண்ணவர்கள் இறங்கிவந்து பூசைசெய்யும் பாதம்
விண்ணிற்கு மோட்சம் தந்து அனுப்பிவைக்கும் பாதம்
விண்ணாளும் மண்ணாளும் மன்னவரின் பாதம்

அனந்தாழ்வார் சேவையதை ஏற்றவரின் பாதம்
அனந்தாழ்வாரிடம் சிறுவனாக சென்றவரின் பாதம்
கடப்பாறையால் அடித்தவரை பொறுத்தவரின் பாதம்
கருணையதன் அவசியத்தை உணர்த்தியவர் பாதம்

அன்னமாச்சாரிக்கு அருளிய நற்பாதம்
மோர்விற்கும் பெண்ணிற்கு மோட்சம்தந்த பாதம்
ராமானுசர் பரிந்துரைத்தால் உகந்துதவும் பாதம்
வராகரின் இடத்தினிலே குடிகொண்ட பாதம்

பொருள்கேட்டு வருவோர்க்கு பொருளளிக்கும் பாதம்
அருள்கேட்டு வருவோர்க்கு அருளளிக்கும் பாதம்
கேட்டதைக் கேட்டபடி உகந்தளிக்கும் பாதம்
வேங்கட மலையானின் வாழ்வளிக்கும் பாதம்

பொன்மகுட தாரியாய் நிற்பவரின் பாதம்
பொன்னாபரண தாரியாய் ஒளிர்பவரின் பாதம்
காதிரண்டில் காதணிகள் தரித்தவரின் பாதம்
திருநாமம் கண்மறைக்க சிரிப்பவரின் பாதம்

Monday, May 30, 2016

விஷ்ணு பிரான் பொற்பாதம்

பாதம் என்ன பாதம் இது விஷ்ணுபிரான் பாதம்
மோட்சமதை அளிக்கின்ற மகிமைமிகு பாதம்
பாம்பணை மேல் சுகித்திருக்கும் சுகமான பாதம்
மகாலட்சுமியும் பிடித்துவிடும் புகழுடைய பாதம்

மச்சமாய் பிறந்தவரின் மாண்புமிகு பாதம்
கூர்மமாய் தவழ்ந்தவரின் நிகரற்ற பாதம்
வராகமாய் வந்தவரின் வடிவான பாதம்
மகாலட்சுமியும் வணங்குகின்ற அழகான பாதம்

சிம்மமுகம் கொண்டொருநாள் சீறியவர்ப் பாதம்
வாமனனாய் மூவடிகள் கோரியவர்ப் பாதம்
விக்ரமனாய் மூவுலுகும் அளந்தவரின் பாதம்
மகாலட்சுமியின் மடியினிலே மகிழ்ந்திருக்கும் பாதம்

பரசுராமனாய் கோபத்துடன் திரிந்தவரின் பாதம்
அரசுராமனாய் பண்பதனில் சிறந்தவரின் பாதம்
பலராமனாய் கிருஷ்ணராய் பிறந்தவரின் பாதம்
மகாலட்சுமியும் மனமகிழ்ந்து மலர்தூவும் பாதம்

பாதுகாப்பு அளிப்பதில் நிகரில்லா பாதம்
பாசமது பொழிவதில் அளவில்லா பாதம்
பற்றுதற்கு தோதான பகட்டில்லா பாதம்
மகாலட்சுமியும் மனதினிலே பூசைசெய்யும் பாதம்

கங்கையதன் ஊற்றாக விளங்கிய நற்பாதம்
கருணயதன் உற்றாக விளங்குகின்ற பாதம்
ஞானமதை ஊற்றாகி வளங்குகின்ற பாதம்
மகாலட்சுமியும் சொடுக்கெடுக்கும் சுபமளிக்கும் பாதம்

ஆழ்வார்கள் பன்னிருவர் பாடிவைத்த பாதம்
பெரியாழ்வார் பல்லாண்டு கூறியநற் பாதம்
ஆண்டாளும் கவிபாடி காதலித்த பாதம்
மகாலட்சுமியும் புகழ்ந்தபடி தடவிவிடும் பாதம்

பொய்கையார் புகழ்ந்துரைத்த புனிதமிகு பாதம்
பூதத்தார் போற்றிவைத்த பொன்னனைய பாதம்
பேயாழ்வார் பாடிவைத்த பெருமைமிகு பாதம்
மகாலட்சுமியும் புடவையால் துடைத்துவிடும் பாதம்

சக்கரத்தார் சந்தக்கவி சாற்றிய நற்பாதம்
நம்மாழ்வார் ஞானக்கவி சூட்டிய நற்பாதம்
மதுரகவி மதுரமொழி கூறிய நற்பாதம்

மகாலட்சுமியின் மனமதனை மயங்கவைக்கும் பாதம்


குலசேகர் கொஞ்சுமொழி கூறிய நற்பாதம்

தொண்டரடி பொடியாரும் தொழுத நற்பாதம்
பாணாழ்வார் பாட்டிசைத்து பாடிய நற்பாதம்
மகாலட்சுமியும் பாசமொடு பார்த்திருக்கும் பாதம்

மங்கைமன்னரை நெறிப்படுத்த நடந்த நற்பாதம்
மங்கைமன்னருக்கு மெட்டியொன்றை காட்டிய நற்பாதம்
மெட்டிக்காட்டி ஞானமதை ஊட்டிய நற்பாதம்

மகாலட்சுபியும் ஆபரணங்கள் சூட்டுகின்ற பாதம்

பக்தர்கள் தரிசிக்க விரும்புகின்ற பாதம்
ஞானிகளின் நினைவதனில் நிலைபெற்ற பாதம்
யோகிகளும் மனதினுள்ளே துதிசெய்யும் பாதம்
மகாலட்சிமியின் பொன்விரல்கள் அலங்கரிக்கும் பாதம்