சுதர்சனம் சுத்துது சுதர்சனம் சுத்துது
திருமாலின் திருக்கரத்தில் சுதர்சனம் சுத்துது
உயர்ந்திருக்கும் வலக்கரம் சுழன்றிருக்கும் சக்கரம்
வலதுசுட்டு விரலிலே சுத்துது சுதர்சனம்
ஈரை நூறு இதழ் செந்தாமரை
கொண்டு பூசை செய்தார் ஈசரை
தாமரைக் கண்ணரே வைகுண்ட மன்னரே
இதயக்கமலம் மீதிலே வீற்றிருக்கும் ஈசரே
பச்சைக் கருங்கல்லிலே லிங்கமொன்றை ஆக்கினார்
பச்சை நீரூற்றியதைக் குளிரக் குளிப்பாட்டினார்
பின்புஅதன் முன்பிலே போட்டுக்கொண்டார் சம்மணம்
சிவலிங்கத்தின் மீதிலே கொண்டிருந்தார் ஒருமனம்
கொண்டுவந்த தாமரையை கையில்கொண்டார் மாலவர்
கொண்டல்வண்ண தேகம்கொண்ட கொண்டல்வண்ண மாலவர்
இதழொன்றை கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது ஒவ்வொன்றாய் கிள்ளிகிள்ளி தூவினார்
முதலிதழைக் கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது தூவினார் கண்ணிரண்டு பூவினார்
ரெண்டாமிதழ் கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது தூவினார் இதயக்கமல பூவினார்
மூன்றாமிதழ் கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது தூவினார் நாபிக்கமல பூவினார்
நான்காமிதழ் கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது தூவினார் மலர்ந்தமுக பூவினார்
ஐந்தாமிதழ் கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது தூவினார் கரமிரண்டு பூவினார்
ஆறாமிதழ் கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது தூவினார் பாதமிரு பூவினார்
ஏழாமிதழ் கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது தூவினார் இதழிரண்டு பூவினார்
எட்டாமிதழ் கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது தூவினார் கத்திரிப்பூ காதினார்
ஒன்பதாமிதழ் கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது தூவினார் மல்லிநகைப் பூவினார்
பத்தாமிதழ் கிள்ளினார் சிவன்புகழை சொல்லினார்
லிங்கம்மீது தூவினார் பத்துவிரல் பூவினார்
இப்படிப் பத்து இன்னும் பத்து
இன்னும் இன்னும் பத்து பத்து
தூவினார் தூவினார் கண்கமலப் பூவினார்
பத்துபத்தாய் தூவினார் தொன்னூறுபத்து தூவினார்
இன்னும் பத்து இன்னும் பத்து
இன்னும் இன்னும் பத்து பத்து
தூவினார் தூவினார் கண்கமலப் பூவினார்
பத்துபத்தாய் தூவினார் பத்துபத்து தூவினார்
கடைசிப்பத்தை தூவையில் ஒற்றையிதழ் குறைந்தது
ஒற்றையிதழ் ஒற்றையிதழ் எங்குஎங்கு மறைந்தது
நினைத்ததை முடிப்பவர் எண்ணினார் எண்ணினார்
குறையிதழை ஈடுசெய்ய முடிவொன்று பண்ணினார்
ஆயிரம் இதழ்களை அர்ச்சிக்க எண்ணினேன்
ஒற்றையிதழ் குறைவாக அத்தனையும் பண்ணினேன்
என்விழி பூவிதழென்பர் நாமகள் நாவாசரே
அதைக்கீறி தருகிறேன் ஏற்றிடுவீர் ஈசரே
என்றுசொல்லி எடுத்துக்கொண்டார் கூரான அம்பினை
அம்பைக்கொண்டு கீறப்போனார் தாமரைக் கண்ணினை
லிங்கம்தன் உள்ளிருந்து கையொன்றை எடுத்தது
கண்கீறும் முன்பாக மாலவரைத் தடுத்தது
திங்கள்முடி தென்னவர் மாலவர்முன் தோன்றினார்
புலித்தோலை போர்த்தியே புன்னகைத்து தோன்றினார்
கையிலொரு சூலராய் கம்பீரமாய் தோன்றினார்
நாககழுத்து தாரியாய் நடனராஜர் தோன்றினார்
இருகாதிலிரு தோடராய் நாதர்நாதர் தோன்றினார்
சாம்பலணி பட்டையுடன் சதாசிவம் தோன்றினார்
ருத்ராக்ஷமாலைகள் கழுத்தில் தொங்கத் தோன்றினார்
முக்கண்ணரிரு கண்ணுடன் எளிமையாக தோன்றினார்
உடுக்கையடி ஈசனார் உமையவளின் நேசனார்
கங்கைமுடி வாசனார் கைலாச ராசனார்
நந்தியொரு தாசனார் சாம்பலுடல் பூசினார்
யானைமுகர் பாசனார் ஆறுமுகர் தாசனார்
தோன்றினார் தோன்றினார் மாலவர்முன் தோன்றினார்
வேண்டியதை கொடுக்கவே மாலவர்முன் தோன்றினார்
வேண்டுவன கேட்கச்சொல்லி மலையவரும் கூறினார்
வேண்டுவது இன்னவென்று மாலவரும் கூறினார்
வேண்டுமொரு சக்கரம் என்விரலிலொரு சக்கரம்
என்னிஷ்டப்படி சென்றுவரும் சுறுசுறுப்பு சக்கரம்
ஆயுதமாய் இருக்கணும் ஆயத்தமாய் இருக்கணும்
சொன்னவற்றை சொன்னபடி முடித்துவரும் சக்கரம்
கரகரவென்று சுத்தணும் சுழன்றுசுழன்று சுத்தணும்
சுழலும்போது தேவைப்பட்டால் நெருப்பைநெருப்பை கக்கணும்
சூரியன்போல் இருக்கணும் சூரியனாய் ஜொலிக்கணும்
சோதி பெருஞ்சோதியாய் சுழன்றுசுழன்று சுத்தணும்
அழிக்கும்சக்தி இருக்கணும் அறுக்கும்சக்தி இருக்கணும்
நான்சுட்டுகின்ற நபர்களை துரத்தும்சக்தி இருக்கணும்
வலிமையும் இருக்கணும் வன்மையும் இருக்கணும்
நிச்சயமாய் வெற்றிபெரும் தன்மையும் இருக்கணும்
மாலவரின் எண்ணத்தை புரிந்துகொண்டார் மலையவர்
கண்ணைமூடி கையைநீட்ட தோன்றினார் சுதர்சனர்
சுழன்றெழுந்தார் சுதர்சனர் விரல்நீட்டிநின்றார் மாலவர்
சுழன்றுசென்று சுட்டுவிரலில் பொருந்திகொண்டார் சுதர்சனர்
சுதர்சனம் சுத்துது சுதர்சனம் சுத்துது
திருமாலின் திருக்கரத்தில் சுதர்சனம் சுத்துது
உயர்ந்திருக்கும் வலக்கரம் சுழன்றிருக்கும் சக்கரம்
வலதுசுட்டு விரலிலே சுத்துது சுதர்சனம்
ராமஹரே ராமராம் ராமஹரே ராமராம்
ராம்ராம ராமஹரே ராம்ராம ராமராம்
ராமஹரே ராமராம் ராமஹரே ராமராம்
ராம்ராம ராமஹரே ராம்ராம ராமராம்
4 comments:
சுதர்சனம் சுத்துது சுதர்சனம் சுத்துது
திருமாலின் திருக்கரத்தில் சுதர்சனம் சுத்துது
உயர்ந்திருக்கும் வலக்கரம் சுழன்றிருக்கும் சக்கரம்
வலதுசுட்டு விரலிலே சுத்துது சுதர்சனம்
சிறப்பான ஆக்கம் ..பாராட்டுக்கள்..!
என் முயற்சிகளை தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி மேடம்!
ஸ்ரீராமஜெயம்!
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
நன்றி மேடம்! தங்களுக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Post a Comment