கலைமகள் நாமகள்
நான்மறையாள் வெண்தாமரையாள்
வீணையினள் முத்துமாலையினள்
வெள்ளையாடையினள் பண்பாடலினள்
கவிபுலமையினள் சொல்வளமையினள் 10
எண்ணினள் எழுத்தினள்
கலையினள் கவியினள்
சொல்லினள் சுவரத்தினள்
பாட்டினள் இசையினள்
கேள்வியள் அதிகாலையள் 20
ஓவியத்தாள் கவிகாவியத்தாள்
நடனத்தினள் நளபாகத்தினள்
சொல்லுற்பத்தியள் சிலைசிற்பத்தினள்
எழுசுவரத்தாள் மென்மலர்க்கரத்தாள்
கைவீணையினள் சொல்லாளுபவள் 30
கணிதத்தினள் நற்புனிதத்தினள்
எண்ணத்தினள் பலவண்ணத்தினள்
அழகியலாள் நல்லறிவியலாள்
சோதிடத்தாள் நற்சோபனையாள்
வெண்மலரலாள் செந்தேன்குரலாள் 40
அன்புடையாள் நல்லறிவுடையாள்
பண்புடையாள் பலதிறனுடையாள்
அழகுடையாள் குயிற்குரலுடையாள்
உலகறிவுடையாள் உடல்வடிவுடையாள்
பொறையுடாள் பெரும்புகழுடையாள் 50
வீணையொடுவீற்றவள் வீணையதைமீட்டினள்
வீணைபிடிகரத்தினள் வீணைதொடுகரத்தினள்
வீணைமீட்டும்விரலினள் வீணைக்கிணைக்குரலினள்
வீணையில்தேர்ச்சியள் வீணைத்தேர்ச்சித்தருபவள்
வீணையைப்பற்றினள் வீணையைவிரும்பினள் 60
கலைத்தேர்ச்சித்தருபவள் இசைத்தேர்ச்சித்தருபவள்
நடனத்தேர்ச்சித்தருபவள் நடிப்புத்தேர்ச்சித்தருபவள்
கல்வித்தேர்ச்சித்தருபவள் கணிதத்தேர்ச்சித்தருபவள்
நாத்தேர்ச்சித்தருபவள் நான்மறைத்தேர்ச்சித்தருபவள்
உலகறிவளிப்பவள் சகலக்கலையருள்பவள் 70
கல்வி கவி
நடனம் நளபாகம்
சிற்பம் ஓவியம்
இசை பாடல்
கலை கூத்து 80
உடலில்நளினம் நினைவிலறிவு
மனதிலொழுக்கம் வினையில்திறமை
செயலிலழகு கலையில்தேர்ச்சி
உணவில்சுவை உழைப்பில்பயிற்சி
வாழ்வில்ரசனை வாக்கில்வளமை 90
சரஸ்வதி சாரதா
வித்யா வீணா
கலா கீதா
காவியா ஓவியா
வாக்கியா நாட்டியா 100
சகலகலாவல்லி சகலகலாஞானி
சகலகலாதேவி நான்முனார்தேவி
நான்முகனார்த்துணை நான்முகனாரிணை
கலைஞர்களின்துணை கற்போதின்துணை 108
0 comments:
Post a Comment