ஓம்கார பிள்ளையார் ஓடிவரும் பிள்ளையார்
ஓமென்ற ஒருசொல்லே உருவான பிள்ளையார்
சக்தியிடம் தோன்றினார் சக்தியுடன் தோன்றினார்
சித்திக்கும் புத்திக்கும் நாதனான பிள்ளையார்
சிவன்மடியில் பிள்ளையென்று வீற்றிருக்கும் பிள்ளையார்
மாலவரும் மாப்பிள்ளையாய் போற்றுகின்ற பிள்ளையார்
தேகத்தில் உழைப்பாக விளங்குகின்ற பிள்ளையார்
உயிருக்கு புண்ணியங்கள் வழங்குகின்ற பிள்ளையார்
முருகருக்கு காதலில் வெற்றிதந்த பிள்ளையார்
வெற்றிபெரும் வித்தையை கற்றுத்தந்த பிள்ளையார்
நற்செயலாக நாணிலத்தில் வென்றுநிற்கும் பிள்ளையார்
தீச்செயலான கஜமுகனை கொன்றொழித்த பிள்ளையார்
ஔவையாரின் பேரனான பாசக்கார பிள்ளையார்
ஔவையார் அகவல்கூறி ஏற்றிவைத்த பிள்ளையார்
ஞானிபலர் பாடல்பாடி போற்றிவைத்த பிள்ளையார்
எப்பொழுதும் முதலிலே வணங்கப்படும் பிள்ளையார்
ஆங்கிலேயன் பிள்ளையாரை ஆக்ஷனென்று கூறுவான்
இனர்ஷியா தடுத்ததில் உருமாறியதாய் கூறுவான்
நம்மவர்கள் பிள்ளையாரை கர்மமென்று கூறுவர்
சிவம்தடுக்க புத்துருவம் பெற்றதென்று கூறுவர்
பிள்ளையாரை பாரடா பிள்ளையாரை பாரடா
ஆடியோடி உன்னில்நீயும் பிள்ளையாரை பாரடா
பிள்ளையாரைப் பாரடா பிள்ளையாரப் பாரடா
நின்றமர்ந்து எழுந்துஎழுந்து பிள்ளையாரைப் பாரடா
ஆடிஆடி பாரடா ஆட்டம் பிள்ளையாரடா
ஓடிஓடி பாரடா ஓட்டம் பிள்ளையாரடா
நீந்திநீந்தி பாரடா நீச்சல் பிள்ளையாரடா
தாவிதாவி பாரடா தாவல் பிள்ளையாரடா
மேலெழுந்து பாரடா எழுதல் பிள்ளையாரடா
கீழ்விழுந்து பாரடா விழுதல் பிள்ளையாரடா
குதித்தெழுந்து பாரடா குதித்தல் பிள்ளையாரடா
பறந்திருந்து பாரடா பறத்தல் பிள்ளையாரடா
சுற்றிசுற்றி பாரடா சுற்றல் பிள்ளையாரடா
சுற்றிமுற்றி பாரடா முற்றும் பிள்ளையாரடா
பட்டம்விட்டு பாரடா விடுதல் பிள்ளையாரடா
பறக்கும்பட்டம் பாரடா பறத்தல் பிள்ளையாரடா
நடராஜர் ஆடினார் நடராஜர் ஆடினார்
ஆட்டமாக ஆட்டமாக பிள்ளையாரே ஆகினார்
கைத்தூக்கி கால்தூக்கி நடராஜர் ஆடினார்
கைத்தூக்கல் கால்தூக்கல் பிள்ளையாரே ஆகினார்
பிள்ளையாரும் ஆடுவார் பிள்ளையாரும் ஆடுவார்
தந்தைபோலே பிள்ளையாரும் அற்புதமாய் ஆடுவார்
கைத்தூக்கி கால்தூக்கி பிள்ளையாரும் ஆடுவார்
துள்ளலோடு தாளத்தோடு தாவித்தாவி ஆடுவார்
குண்டான தேகமாட தானசைந்து ஆடுவார்
உண்டான தொப்பையாட தானிசைந்து ஆடுவார்
பிள்ளையாரின் தொப்பையாட அண்டம்யாவும் ஆடிடும்
தாவரங்கள் பூமரங்கள் தாமசைந்து ஆடிடும்
உச்சிமுதல் பாதம்வரை ஒன்றியங்கி ஆடுவார்
ஆதிதாளம் பூபாளம் அத்தனைக்கும் ஆடுவார்
அபிநயங்கள் காட்டிகாட்டி ஆனந்தமாய் ஆடுவார்
பீடுநடை போட்டுபோட்டு பெருமிதமாய் ஆடுவார்
கைவலது காலிடது தூக்கிக்காட்டி ஆடுவார்
கைவிரல்கள் ஈரைந்து அபிநயித்து ஆடுவார்
தும்பிக்கையை கைகளோடு கூடவைத்து ஆடுவார்
காதுகளை தோடுகளை ஆடவைத்து ஆடுவார்
காற்றிலாடும் தாவரத்தில் பிள்ளையாரைப் பாரடா
கடல்கடக்கும் பாய்மரத்தில் பிள்ளையாரைப் பாரடா
கடலலைகள் ஒவ்வொன்றிலும் பிள்ளையாரைப் பாரடா
அவை எழுவதுவும் விழுவதும் பிள்ளையாரே தானடா
மேயும்மானை பாரடா மேய்ச்சல் பிள்ளையாரடா
பாயும்புலி பாரடா பாய்ச்சல் பிள்ளையாரடா
விரியும்வலை பாரடா விரித்தல் பிள்ளையாரடா
நழுவும்மீனை பாரடா நழுவல் பிள்ளையாரடா
உண்பவனைப் பாரடா உண்ணல் பிள்ளையாரடா
உறங்குபவன் பாரடா உறக்கம் பிள்ளையாரடா
கண்ணிமையைப் பாரடா சிமிட்டல் பிள்ளையாரடா
உன்னிதயம் பாரடா துடித்தல் பிள்ளையாரடா
இவ்வண்டம் எங்கிலும் நடராஜர் ஆட்டமாம்
அப்பாவின் ஆட்டத்தில் பிள்ளையார் ஆடலாம்
இவ்வண்டம் என்றுமே பிள்ளையாய் வளருதாம்
அண்டமே அப்பனாம் வளர்ச்சியே பிள்ளையாம்
பிள்ளையாரைப் போற்றணும் பிள்ளையாரைப் போற்றணும்
வளர்ச்சியான பிள்ளையாரை நாம்வளர போற்றணும்
பிள்ளையாரைப் போற்றணும் பிள்ளையாரைப் போற்றணும்
நற்செயாலான பிள்ளையாரை நன்றியோடு போற்றணும்
அமர்ந்திருப்பார் பிள்ளையார் எழுந்திடுவார் பிள்ளையார்
நின்றிருப்பார் பிள்ளையார் நடந்திடுவார் பிள்ளையார்
ஓடிடுவார் பிள்ளையார் ஆடிடுவார் பிள்ளையார்
ஆடியோடும் ஓடியாடும் ஆனந்தப் பிள்ளையார்
மோதகமும் கொடுக்கணும் அவல்பொறியும் கொடுக்கணும்
கொண்டைக்கடலை சுண்டலும் சுவையாக கொடுக்கணும்
உருண்டையுருண்டை உணவுகளை உருட்டியுருட்டி கொடுக்கணும்
குழந்தையென்று நினைவில்கொண்டு கொஞ்சிக்கொஞ்சி கொடுக்கணும்
பூமியும் உருண்டைதான் சூரியனும் உருண்டைதான்
சந்திரனும் நவகோளும் அத்தனையும் உருண்டை தான்
நட்சத்திரம் உருண்டைதான் பால்வீதி உருண்டைதான்
கோடிகோடி பால்வீதி அத்தனையும் உருண்டை தான்
பிள்ளையார் தொப்பையுள் இத்தனையும் இருப்பதால்
உருண்டையுருண்டை உணவுகளை உருட்டியுருட்டி கொடுக்கணும்
அன்பாக கொடுக்கணும் ஆசையாக கொடுக்கணும்
குழந்தையென்று நினைக்காமல் அடிபணிந்து கொடுக்கணும்
கொட்டும் மழைப்பாரடா கொட்டல் பிள்ளையாரடா
சொட்டும் நீர்ப்பாரடா சொட்டல் பிள்ளையாரடா
குத்துச்சண்டை பாரடா குத்தல் பிள்ளையாரடா
தட்டும் கையைப் பாரடா தட்டல் பிள்ளையாரடா
டேபிள்டென்னிஸ் பாரடா பந்தில் பிள்ளையாரடா
துள்ளும்வீரன் பாரடா துள்ளல் பிள்ளையாரடா
கிரிக்கெட்டைப் பாரடா பேட்டிங் பிள்ளையாரடா
பால்போட்டு விக்கெட்டை வீழ்த்தும் பிள்ளையாரடா
ஃபுட்பாலை பாரடா ஃபுல்லும் பிள்ளையாரடா
உதைப்பதுவும் உருவளுதும் பிள்ளையாரே தானடா
விசிலடித்தல் பிள்ளையார் விரட்டிசெல்தல் பிள்ளையார்
கோல்தடுத்தல் கோலடித்தல் அத்தனையும் பிள்ளையார்
தொழிற்சாலையிலும் பிள்ளையார் வயல்வெளியில் பிள்ளையார்
உழைப்புள்ள இடத்திலெல்லாம் உழைப்பாகும் பிள்ளையார்
உழைப்பைநாமும் போற்றணும் உழைப்பைநாமும் போற்றணும்
மண்ணைக்கூட பொன்னாக்கும் உழைப்பைநாமும் போற்றணும்
பிள்ளையாராம் பிள்ளையார் பெருமைமிகு பிள்ளையார்
அரசமர நிழலிலே அமர்ந்திருக்கும் பிள்ளையார்
யானைமுக பிள்ளையார் அழகான பிள்ளையார்
அன்புடனே ஞானங்கூட அருளுகின்ற பிள்ளையார்
சுண்டலியின் மீதிலே சுகமாக செல்பவர்
இருக்குமிடம் இருந்தபடி எளிதாக வெல்பவர்
தொப்பையொரு பானையாம் பானைநிறை பாசமாம்
ஆயுதமாய் கைகளிலே அங்குசமும் பாசமாம்
ஞானக்கனி மோதகமும் உள்ளங்கையில் கொண்டவர்
பசிக்கும்போது கொஞ்சங்கொஞ்சம் கடித்துகடித்து தின்பவர்
அகன்றத்திருகாதுகள் அளிக்கும் கேள்வி ஞானங்கள்
அகன்றிருக்கும் பார்வையோ கண்டுசொல்லும் உண்மைகள்
தும்பிக்கையோ செயல்திறனின் மறுவடிவாய் உள்ளது
ஊசிமுதல் மரங்கள்வரை அத்தனையும் அள்ளுது
வளைந்திருக்கும் ஒருதந்தம் வளைந்துதர சொல்லுது
உடைந்திருக்கும் ஒருதந்தம் இழப்பையேற்க சொல்லுது
மனிதமுகம் இல்லையென்று வருந்தாத பிள்ளையார்
தனித்தன்மை தன்னம்பிக்கை அழகென்னும் பிள்ளையார்
தொப்பையொரு குறையில்லை என்றுசொல்லும் பிள்ளையார்
தோற்றம் பெரும்பொருட்டில்லை என்றுசொல்லும் பிள்ளையார்
தாய்ப்போன்ற மனைவியை கேட்டுப்பெற்ற பிள்ளையார்
மனைவியில் தாயினைக் காணச்சொன்ன பிள்ளையார்
அம்மாவை அப்பாவை சுற்றிவந்த பிள்ளையார்
அம்மாவே அப்பாவே உலகமென்ற பிள்ளையார்
நாமளும் சுத்தணும் பெற்றோரை சுத்தணும்
பிள்ளையாரைப் போலவே பெற்றோரை சுத்தணும்
அம்மாவை அப்பாவை அமரச்சொல்லி சுத்தணும்
அருகருகே அமர்ந்திருக்க அன்புடனே சுத்தணும்
பெற்றோரை சுற்றிவந்து கனிவென்ற பிள்ளையார்
ராமநாமம் சுற்றிவந்து மீண்டும்வென்ற பிள்ளையார்
முருகருக்கு நல்லதொரு அண்ணனான பிள்ளையார்
பாசத்தோடு பாடம்பல கற்றுதந்த பிள்ளையார்
சுதர்சனத்தை வாயில்போட்டு விழுங்கிவிட்ட பிள்ளையார்
மாயம்மாயம் மாயமென்று சொல்லிசிரித்த பிள்ளையார்
மாயவரும் மருமகனை சிரிக்கவைக்க யோசித்தார்
தோப்புக்கரணம் போட்டுபோட்டு முதன்முதலில் பூசித்தார்
பிள்ளையாரை வணங்கணும் பிள்ளையாரை வணங்கணும்
நம்காதை கிள்ளிகிள்ளி பிள்ளையாரை வணங்கணும்
தோப்புக்கரணம் போடணும் தோப்புக்கரணம் போடணும்
அவர்புகழை சொல்லிச்சொல்லி தோப்புக்கரணம் போடணும்
சிவனாரை வேண்டியே தவம்செய்த பிள்ளையார்
தவமேற்ற சிவனிடம் தலைக்கேட்ட பிள்ளையார்
திகைத்துநின்ற சிவனின்முன் பெருந்தன்மைப் பிள்ளையார்
சிவனுடைத்தக் காயினை ஏற்றுக்கொண்ட பிள்ளையார்
தேங்காயை உடைக்கணும் தேங்காயை உடைக்கணும்
சுக்கல்சுக்கல் ஆகும்படி தேங்காயை உடைக்கணும்
தேங்காயை உடைக்கணும் தேங்காயை உடைக்கணும்
நம்தலையென்று சொல்லிவிட்டு தேங்காயை உடைக்கணும்
மகுடமது பொன்னிலே தோடுமது காதிலே
மாலையது கழித்திலே மகிழ்ச்சியது முகத்திலே
முப்புரிநூல் நெஞ்சினில் மும்மதமும் நெற்றியில்
செய்கின்ற செயலெல்லாம் முடிவதுவும் வெற்றியில்
கைவளையல் கைககளாம் மோதிர பொன்விரல்களாம்
பொன்னாரம் பூவாரம் மணியாரம் நெஞ்சிலாம்
தும்பிக்கையில் கைகளில் மருதாணிக் கோலங்கள்
தும்பிக்கையின் தொடுதலால் துவங்கும் நல்லநேரங்கள்
2 comments:
பிள்ளையார் தன் வாகனத்துடன் ஆடும் ஆட்டமும் ,படங்களும் வசீகரித்தன...!!
பாராட்டுக்கள்..!
நன்றி மேடம்!
:)
அவர் ஒரு வசீகரன். அவர் உங்களை வசீகரித்ததில் ஆச்சர்யமில்லை!
Post a Comment