மகாமாயை பதம் போற்றி தேவர் பூசிக்கும் பதம் போற்றி
சங்கு சக்ர கதை தாங்கும் கரத்தவள் தம் பதம் போற்றி
கருட வாகனம் மேல் செல்லும் கோலாசுர வதையை போற்றி
சர்வ பாவம் ஒழிக்கின்ற மகாலட்சுமி பதம் போற்றி
அனைத்தும் அறிந்தாய் வரம் தருவாய் தீயோர் மிரள பயம் தருவாய்
அனைத்து சோகங்கள் அழித்திடுவாய் மகாலட்சுமி பதம் போற்றி
சித்தி புத்தித் தருகின்றாய் இன்பம் வீடு தருகின்றாய்
என்றும் மந்திர வடிவாயுள்ள மகாலட்சுமி பதம் போற்றி
ஆதி அந்தம் இலா தேவி ஆதி சக்திப் பெரும் தேவி
யோகம் தோன்றி யோகம் உற்றாய் மகாலட்சுமி பதம் போற்றி
அருவாய் உருவாய் வளமானாய் பலமுடன் ரெளத்ரம் கொள்கின்றாய்
சர்வ பாவங்கள் அழிக்கின்றாய் மகாலட்சுமி பதம் போற்றி
செந்தாமரை மலர் மேல் வீற்றாய் பரம் பொருள் நீ மகாலட்சுமி
அண்டத்தின் அதிபதி அன்னை மகாலட்சுமி பதம் போற்றி
வெள்ளை ஆடை பொன் நகை தரித்தாய் மகாலட்சுமி அன்னையே
அண்டம் எங்கும் நிறைகின்றாய் மகாலட்சுமி பதம் போற்றி
மகாலட்சுமி புகழ் எட்டும் என்றும் அன்புடன் ஓதுவோர்
வெற்றி செல்வம் வளம் பெறுவர் என்றும் என்றும் என்றுமே
ஒரு நாள் ஒரு முறை சொன்னால் பாவம் அழியும் அழியுமே
ஒரு நாள் இரு முறை சொன்னால் செல்வம் தானியம் பெருகுமே
ஒரு நாள் மும் முறை சொன்னால் எதிரிகள் யாவரும் அழிவரே
மகாலட்சுமி மனம் குளிர்வாள் வரங்கள் மங்களம் அருள்வளே
பி.கு : மகாலக்ஷ்மி அஷ்டகத்தின் தமிழ் வடிவம்
0 comments:
Post a Comment