என் இதயமும் அதன் துடிப்பும் ராமர் தான்
என் கண்ணும் கண்மணியும் ராமர் தான்
என் வாழ்க்கையும் அதன் லட்சியமும் ராமர் தான்
என் உயிரும் அதன் ஒளியும் ராமர் தான்
என் வாழ்வெல்லாம் அவர் புகழ் பரப்புவேன்
என் வாழ்வெல்லாம் அவர் பெயர் பாடுவேன்
நன்மை உருவம் நன்மை உருவம் ராமர் தான்
மகத்துவத்தின் உச்சம் உச்சம் ராமர் தான்
நான் வாழ்வது நான் வாழ்வது ராமருக்காக தான்
என் இதயத்தின் தலைவர் ராமர் தான்
தலைவர் ராமர் என் இதயத்தில் வாழ்கிறார்
எனக்கு மூச்சை விடவும் முக்கியம் ராமர் தான்
அவர் வாழ்வெல்லாம் அவர் வாழ்வெல்லாம்
அவர் இதயத்தில் ஓரே பெண் தான் வீற்றிருந்தாள்
அவளையும் அவர் தியாகம் செய்தார்
தன் குடிமக்களின் நன்மைக்காக!
அவர் செயலில் சுயநலம் என்றும் கலந்ததில்லை
தன் எதிரிகளிடமும் கனிவையே காட்டினார்
நன்மை தார்மீகக் கட்டுக்கோப்பு
வீரம் வெற்றி புகழ்
அனைத்தும் இர்ந்தும் பணிவு
அவரிடத்தில் காணப் பட்டன
உதாரண புருஷன் ராமர் தான்
உச்சமான தெய்வம் ராமர் தான்
நன்மை ராமரிடம் இருந்து வருகிறது
மகத்துவம் ராமரிடம் இருந்து வருகிறது
சிவனார் எப்பொழுதும் ராம நாமம் ஜபிக்கிறார்
சிவனார் எப்பொழுதும் ராம புகழ் பாடுகிறார்
அன்பின் உருவம் அன்பின் உருவம் ராமர் தான்
கருணையின் உச்சம் கருணையின் உச்சம் ராமர் தான்
0 comments:
Post a Comment