பாற்கடல்பிறந்தவள் பாற்கடல்புகுந்தவள்
பாற்கடல்வசிப்பவள் பாற்கடல்ரசிப்பவள்
பால்நிலவுடன்பிறந்தவள் பால்நிலவெனமுகத்தவள்
பாற்கடல்வாசரில்வசிப்பவள் பாற்கடல்வாசரைரசிப்பவள்
பாம்பணைமேலிருப்பவள் பாம்பணைவாசரைத்துதிப்பவள் (10)
பரிவுடன்அருள்பவள் அரியுடன்மகிழ்பவள்
பார்கவர்தவமகள் பார்புகழடைந்தவள்
பார்வையாலருள்பவள் பார்புகழ்தருபவள்
பாராளவைப்பவள் தாராளமனத்தினள்
பாசுரம்படைத்தவள் பாசத்தால்நனைப்பவள் (20)
அபயமளிகரத்தினள் அடிசுட்டும்கரத்தினள்
மலர்பிடிகரத்தினள் மழைபொழிவரத்தினள்
நான்குகரத்தினள் நறுமலர்க்கரத்தினள்
சுறுசுறுப்பளிப்பவள் துரிதமளிப்பவள்
துரிதசெயலினள் அக்கணமருள்பவள் (30)
கருவண்டுக்கண்ணினள் கருணைக்கண்ணினள்
கண்ணன்காண்கண்ணினள் கண்ணனைக்காண்கண்ணினள்
இன்மைபோக்கும்கண்ணினள் ஏற்றம்தரும்கண்ணினள்
வளமளிக்கும்கண்ணினள் வாழ்வளிக்கும்கண்ணினள்
மங்களந்தருக்கண்ணினள் மன்னனாக்கும்கண்ணினள் (40)
மைவிழிக்கண்ணினள் மலர்விழிக்கண்ணினள்
மங்களக்கண்ணினள் மாலவர்க்குக்கண்ணினள்
ஒளியுடையக்கண்ணினள் பொலிவுடையக்கண்ணினள்
அருளளிக்கும்கண்ணினள் பொருளளிக்கும்கண்ணினள்
அருளும்கண்ணினள் அன்பார்ந்தக்கண்ணினள் (50)
பொன்நகையணிபவள் புன்னகைபுரிபவள்
பொன்மகுடத்தலையினள் பொற்தோடுக்காதினள்
பொன்மூக்குத்திமூக்கினள் பொன்னாரக்கழுத்தினள்
பொன்வளையல்கரத்தினள் பொன்வங்கிபுஜத்தினள்
பொன்னொட்டியாணயிடையினள் பொற்கொலுசுக்காலினள் (60)
வறுமையழிப்பவள் ஏழ்மையழிப்பவள்
துயரமழிப்பவள் துரதிஷ்டமழிப்பவள்
கடன்களழிப்பவள் கஷ்டமழிப்பவள்
சோம்பலழிப்பவள் சோகமழிப்பவள்
கோலாசுரவதையள் கோலாகலக்கதையள் (70)
அன்பு அதிர்ஷ்டம்
அக்கறை அரவணைப்பு
ஆற்றல் ஆளுமை
சுறுசுறுப்பு ஊக்கம்
முயற்சி வெற்றி (80)
நாரணரின்நங்கை மாலவரின்மங்கை
திருமாலின்திரு தாமோதரர்த்துணை
ஶ்ரீவிஷ்ணுபத்தினி விஷ்ணுமார்பவாசினி
விஷ்ணுபாதசேவகி ரங்கநாதர்நாயகி
அரிமனம்நிறைந்தவள் அரிகுணம்விரும்பினள் (90)
மாமலராள் செந்தாமரையாள்
பத்மாவதியாள் பங்கயச்செல்வி
பெரும்செல்வி அருட்செல்வி
சீதாலக்ஷ்மி ருக்மிணி
ஶ்ரீலக்ஷ்மி மஹாலக்ஷ்மி (100)
பூமியில்நதி மனிதரில்நிதி
உடலில்சுறுசுறுப்பு உள்ளத்திலூக்கம்
இதயத்திலீரம் யுத்தத்தில்வீரம்
வாழ்வில்வளம் செயலில்வெற்றி (108)
0 comments:
Post a Comment