உள்ளம் வெல்லும் ராமபிரான்
புகழ் பாடும் நல் நேரம்
உள்ளம் வெல்லும் ராமபிரான்
புகழ் பாடும் நல் நேரம்
கறையுள்ளது
கறையுள்ளது அவ்வானின் சந்திரன்
கறையில்லாதவர் ஸ்ரீராமச்சந்திரன்
அவ்வானம் போலே நீளும் அவர் புகழ்
உள்ளம் வெல்லும் ராமபிரான்
புகழ் பாடும் நல் நேரம்
உள்ளம் வெல்லும் ராமபிரான்
ராமர் தம்பி பரதரை நினைத்தால்
அன்பும் நெஞ்சில் பாலாய் ஊறும்
தொண்டைக் குழியும் அடைத்துக் கொள்ளும்
கண்ணில் நீரும் ஆறாய் பெருகும்
உந்தன் கதையை கேட்டால் போதும்
கல்லும் கூட உருகும் ராமா!
விண்ணை அளக்கும் இமயம் கூட
உந்தன் புகழை தொடுமோ ராமா!
பூப் போன்றது உன் உள்ளம்
உன் பாதத்தில் நான் தஞ்சம்
உந்தன் புகழ் எங்கெங்கும்
சொல்லும் தொழில் என் அங்கம்
உலகம் எங்கும் உன் புகழ் சொல்வேன்
உள்ளம் வெல்லும் ராமபிரான்
புகழ் பாடும் நல் நேரம்
உள்ளம் வெல்லும் ராமபிரான்
உந்தன் வாழ்வில் காதெலென்று
ஒன்றே ஒன்று என்றும் உண்டு
உன்னிடம் இருந்து பிரிந்தால் கூட
உன் நினைவில் அவளும் என்றும் உண்டு
சந்தேகம் கொண்டு விலக்கியோ ராமா
அவள் பொற்சிலை தன்னை கண்ணாய் காத்தாய்?
அதன்பின் செய்த யாகத்தில் எல்லாம்
மனைவி ஸ்தானத்தில் அவளை வைத்தாய்?
நீ செய்தது நல் தியாகம்
நல்லோர் உள்ளம் அதை காணும்
கறை இல்லாதது உன் காதை
குறை இல்லாதது உன் பாதை
உலகம் எங்கும் உன் புகழ் சொல்வேன்
உள்ளம் வெல்லும் ராமபிரான்
புகழ் பாடும் நல் நேரம்
உள்ளம் வெல்லும் ராமபிரான்
புகழ் பாடும் நல் நேரம்
கறையுள்ளது அவ்வானின் சந்திரன்
கறையுள்ளது அவ்வானின் சந்திரன்
கறையில்லாதவர் ஸ்ரீராமச்சந்திரன்
அவ்வானம் போலே நீளும் அவர் புகழ்
உள்ளம் வெல்லும் ராமபிரான்
புகழ் பாடும் நல் நேரம்
உள்ளம் வெல்லும் ராமபிரான்
0 comments:
Post a Comment