நல்லவர் போற்றிடும் அழகிய மாதவி சந்திர சோதரி பொன்மயளே
முனிகள் சூழ்ந்திட மோட்சங்கள் தந்திடும் இனிமை வாக்கினள் மறையவளே
தாமரைகளில் வசிக்கின்ற தேவர்கள் துதிக்கின்ற சத்குணம் அளிக்கின்ற சாந்த குணள்
வெல்கவே வெல்கவே மதுசூதனர் காதலி ஆதிலக்ஷ்மி என்னை காத்திடுவாய்
கலியுக குற்றங்கள் களைந்திடும் அன்பினள் வேதத்தின் வடிவினள் மறையவளே
பாற்கடலில் தோன்றிய மங்கள வடிவினள் மந்திரங்கள் போற்றிடும் மறையவளே
மங்களம் அருள்பவள் மலர்களில் வசிப்பவள் தேவர்கள் துதிசெய்யும் பதமுடையாள்
வெல்கவே வெல்கவே மதுசூதனர் காதலி தான்யலக்ஷ்மி என்னை காத்திடுவாய்
வெல்பவர் துதித்திடும் வைணவி பார்கவி மந்திர வடிவினள் மறையவளே
தேவர்கள் தொழுதிடும் விரைவினில் பலன் தரும் ஞானம் நல்கிடும் மறையவளே
பயங்கள் போக்கிடும் பாவங்கள் ஒழித்திடும் புனிதர்கள் துதிசெயும் பதமுடையாள்
வெல்கவே வெல்கவே மதுசூதனர் காதலி தைர்யலக்ஷ்மி என்னை காத்திடுவாய்
வெல்கவே வெல்கவே தீவிதி தீர்த்திடும் அன்பினள் வரமருள் மறையவளே
நால்வகை படைகளும் சூழ்ந்திட விளங்கிடும் உலகினர் போற்றிடும் தூயவளே
மூவரும் போற்றிட விளங்கிடும் தேவியே துயரங்கள் தீர்த்திடும் பதமுடையாள்
வெல்கவே வெல்கவே மதுசூதனர் காதலி கஜலக்ஷ்மி என்னை காத்திடுவாய்
பறவை மேல் பறப்பவள் மோகினி சக்ரிணி கோபங்கள் களைந்திடும் ஞானமயள்
குணகடல் உலகங்கள் தழைத்திட விரும்பினள் எழுசுரங்களும் ஏற்றிடும் இனியவளே
அசுரர் சுரர் சித்தர் மானுடர் போற்றிட அன்புடன் அருளிடும் பதமுடையாய்
வெல்கவே வெல்கவே மதுசூதனர் காதலி சந்தானலக்ஷ்மி என்னை காத்திடுவாய்
மலரதில் வீற்றுள நற்கதி நல்கிடும் ஞானம் பரப்பிடும் ஞானமயள்
குங்கும மழையையும் கருவிகள் இசையையும் வழிபாடென தினமும் ஏற்பவளே
சங்கரர் துதிசெய்ய தங்கக் கனிகளை ஏழை மேல் பொழிந்திட்ட பதமுடையாள்
வெல்கவே வெல்கவே மதுசூதனர் காதலி விஜயலக்ஷ்மி என்னை காத்திடுவாய்
சுரர்களின் தேவியே பாரதி பார்கவி துக்க மழித்திடும் ரத்தினமே
மணிகள் பொதிந்துள்ள பொன் நகை புன்னகை அணிந்து விளங்கிடும் சாந்தகுணள்
நவவகை செல்வங்கள் தந்திடும் கலியுக துன்பங்கள் களைந்திடும் கரத்தினளே
வெல்கவே வெல்கவே மதுசூதனர் காதலி வித்யாலக்ஷ்மி என்னை காத்திடுவாய்
திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி துந்துபி முழங்கிட நிறைபவளே
குமகும கும்கும கும்கும கும்கும சங்குகள் முழங்கிட மகிழ்பவளே
வேத புராண இதிகாசங்கள் ஏற்றிடும் பக்தியின் வழியதை அருள்பவளே
வெல்கவே வெல்கவே மதுசூதனர் காதலி தனலக்ஷ்மி என்னை காத்திடுவாய்
பி.கு: அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரத்தின் தமிழ் வடிவம்
2 comments:
அருமை
நன்றி நண்பரே
Post a Comment